வரும் 11-11-11ம் தேதியில் குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பமா? இம்மாத இறுதிக்குள் கர்ப்பம் தரிக்க வேண்டும் என, டாக்டர்கள் கூறுகின்றனர்.
"விசேஷ தேதி, நேரத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என, யாரும் திட்டமிட்டு கருத்தரிப்பதில்லை. திட்டமிட்ட கருத்தரிப்புகளில் ஏற்படும் பிரச்னைகள் காரணமாகவே, பெற்றோர் அதை விரும்புவதில்லை' என, ஒரு சில மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மகப்பேறு மருத்துவர் ஒருவர் கூறியதாவது: கருத்தரிப்பது பற்றியும், குழந்தை பிறக்கும் நேரம் பற்றியும் இன்றைய பெற்றோர் பல்வேறு கற்பனைகள் கொண்டுள்ளனர்.
இருந்தாலும், டாக்டர்களாகிய எங்களால், திட்டமிட்ட பிரசவத்திற்கான உத்தரவாதம் எதுவும் தரமுடியாது; பிரசவ காலத்தையும் சரியாக கணித்துக் கூறமுடியாது. விசேஷ தினங்களில்தான் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் எனும் எண்ணத்தை இன்றைய பெற்றோர் கைவிட வேண்டும்.
எனினும், வரும் நவம்பர் மாதம் 11-11-11ல் தங்களுக்கு குழந்தை பிறக்க வேண்டும் என நினைப்பவர்கள், இம்மாத இறுதிக்குள் கருத்தரிக்க வேண்டும். அப்போது தான், மேலே குறிப்பிட்ட தேதியில், குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்.
அதே சமயம், உரிய தேதியில் தான் குழந்தை பிறக்க வேண்டும் என நினைத்து கருத்தரிக்கும் பலரும், அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மற்றொரு மருத்துவர் கூறுகையில், "திட்டமிட்ட பிரசவம் சாத்தியமானது தான். முன்கூட்டியே திட்டமிடுதலில் தவறில்லை. ஆனால், பிரசவ காலத்தில் தேவையற்ற சிக்கல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இருந்தும், முன்கூட்டியே திட்டமிடப்படும் பல பிரசவங்கள், தவறி விடுவதும் உண்டு' என்கிறார். இந்த புத்தாண்டில், (1-11-11; 11மணி மற்றும் 11 நிமிடம்) குழந்தை பெற்ற சீமா தசீம் கூறுகையில், "எனது கருத்தரிப்பு, திட்டமிட்டு நடந்ததல்ல.
இருந்தும், "குறிப்பிட்ட காலத்தில்தான் குழந்தை பிறக்கும்' என டாக்டர்கள் கூறிய பின் தான், நாங்கள் குறிப்பிட்ட நேரத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்தோம்' என்றார்.
அதே தினம் மற்றும் நேரத்தில் பிறந்த மற்றொரு குழந்தையின் தந்தை அப்துல் கரீம், "பிரசவத்தில் சிக்கல் ஏற்படக் கூடாது என நினைத்து, டாக்டர்கள் தான் "சிசேரியன்' செய்து, குழந்தையை வெளியே எடுத்தனர்' என, தெரிவித்தார்
0 comments:
Post a Comment