மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 ஐ தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளது.
Microsoft Internet Explorer 9
மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தி, அசாமீஸ், வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட 53 மொழிகளில் தன் பிரவுசரை வடிவமைத்துள்ளது.
பல்வேறான மொழிகளில் தன் பிரவுசரை வெளியிட்டதன் மூலம் அனைத்து தரப்பு மக்களிடம் தன் சாதனங்களை மைக்ரோசாப்ட் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்த பிரவுசர் வெளியான போது மைக்ரோசாப்ட் இந்தியாவில் பிரபலமான 29 இணைய தளங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 ஐ பிரபலப்படுத்த இந்த ஒப்பந்தம் வழி வகுக்கும் என நம்பப்டுகிறது.
தமிழ் மற்றும் பிற மொழிகளில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரை நமது கணணியில் இயக்க http://windows.microsoft.com/en-US/internet-explorer/downloads/ie-9/worldwide-languages என்ற முகவரி சென்று அங்கிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நமது கணணியில் இயங்கும் ஆபரேட்டிங் சிஸ்டம் ( விஸ்டா/விண்டோஸ் 7 x 32 / 64 பிட் ) எது என அறிந்து அதற்கேற்ற பதிப்பினை தரவிறக்கம் செய்யலாம்.
மேலும், விண்டோஸ் எக்ஸ்பியில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 இயங்காது என்பது குறிப்பிடதக்கது.
இருப்பினும் இந்த வரிசையில் மைக்ரோசாப்ட் சற்று தாமதமாகவே நுழைந்துள்ளது. ஏற்கனவே கூகுள் குரோம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த எபிக் ஆகிய பிரவுசர்கள் இந்திய மார்க்கெட்டைக் குறி வைத்து உருவாகி அமலில் உள்ளன என்பது நினைவிருக்கலாம்.
அதேசமயம், இந்திய சந்தையை மைக்ரோசாப்ட் குறி வைப்பது முதல் முறையல்ல. பொனடிக் கீபோர்ட், இந்திய மொழிகளுக்கான இன்டிங் லாங்குவேஜ் இன்புட் டூல் உள்ளிட்டவற்றை ஏற்கனவே அது அறிமுகப்படுத்தியுள்ளது. இமெயில், மெசஞ்சர் ஆகியவற்றிலும் இந்திய மொழிகளை அது ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment