Thursday, June 16, 2011

வடக்கில் அரை இராணுவ ஆட்சி


வடக்கில் அரை இராணுவ ஆட்சி நடைபெறுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.பத்ரமுல்லையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் : -

வடக்கில் மக்கள் நிம்மதியாக வாழ முடியாதும், கருத்துக்களை வெளிப்படுத்த முடியாதும், சுதந்திரமாக நடமாட முடியாதும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

வடக்கில் பொதுமக்கள் வதிவிட பதிவுகள் மேற்கொள்ளக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதும் கோப்பாய் பகுதியில் இராணுவத்தினர் புகைப்படத்துடன் கூடிய பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் மூலமாக இராணுவத்தினர் நீதிமன்ற தீர்பினை அவமதிக்கின்றனர்.

வடக்கு கிழக்கு மக்களுக்கு உண்மையான தீர்வினை முன்வைக்க அரசிடம் வேலைதிட்டம் இல்லை. ஆகையால் உண்மையான பிரச்சனைகளை தீர்த்து வைக்கவேண்டும்.

முகாம்களில் உள்ளவர்களின் பிரச்சனைக்கு சரியான தீர்வினை பெற்றுக் கொடுக்கவேண்டும். என்றார்.

0 comments:

Post a Comment


Online Details

 

dishunters

Copyright 2010 யாழின் விடியல். All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog