
'பேஸ்புக்' எனப்படும் சமூக வலையமைப்பு தொடர்பில் இலங்கையில் அதிக அளவிலான முறைபாடுகள் முன்வைக்கப்பட்டு வருவதாக, இலங்கை தேசிய கணினி அவசர சேவைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதன் சிரேஷ்ட தகவல் பரிமாற்று அதிகாரி ரோஹன பல்லியகுரு இதனை தெரிவித்தார்.
இந்த இணையத்தளத்தின் ஊடாக, தனிநபர் மேற்கொள்கின்ற மோசடிகள் குறித்து, அதிக அளவிலான முறைபாடுகள் முன்வைக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் தற்போது கிடைக்கப்பெற்றுள்ள முறைபாடுகளின் அடிப்படையில், பேஸ்புக் மோசடிகளை செய்யபர்களை கைது செய்யும் பொருட்டு, குற்றத் தடுப்பு பிரிவின் துணையுடன் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பேஸ்புக் இணையத்தளத்தை கையாளும் போது அவதானமாக இருக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Share330
0 comments:
Post a Comment