Saturday, February 19, 2011

வரப் போகின்ற மனைவி எப்படி இருப்பாள்? என்பதை அறிகின்ற வரத்தை கொடுக்கும் இந்திய இணையத்தளம்!

மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். வரப் போகின்ற மனைவி எப்படிப்பட்டவளாக இருப்பாள்? என்பதை முன்கூட்டியே அறியும் வரத்தை தருகின்றது இந்தியாவின் இணையத் தளம் ஒன்று.

திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு வரப் பிரசாதமாக அமைந்திருக்கும் இந்த இணையத் தளத்தின் பெயர் Biwihotohaisi.com உள்ளத்தில் கற்பனை செய்து வைத்திருக்கும் மனைவியிடம் எதிர்பார்க்கின்ற விடயங்களை இணையத்துக்கு தெரியப்படுத்த முடியும்.

அந்த மனைவி எப்படியான குணங்களை கொண்டு இருப்பாள்? என்பதை இணையம் உங்களுக்கு தெரியத் தரும். மனைவியை தேர்ந்து எடுக்கின்றமைக்கான ஒத்திகையாகவும் இச்செயன்முறையை கருத முடியும்.

மனைவிமார் நான்கு விதம் ஆனவர்கள் என்று வகைப்படுத்தி வைத்திருக்கின்றது இந்த இணையம்.

1) அர்ப்பணிப்பு உடைய குடும்பப் பெண்

2) அடக்க, ஒடுக்கமான பெண்

3) ஊதாரிப் பெண்

4) அடங்காப்பிடாரி பெண் என்பன அந்த நான்கு ரகமும்.

வருங் கால மனைவியிடம் எதிர்பார்க்கின்ற விடயங்களை கருத்தில் கொண்டு கற்பனை மனைவியை இணையத்தில் கிளிக் பண்ணலாம். அக்கற்பனை மனைவியிடம் இருந்து உங்களுக்கு தானியங்கி தொலைபேசி அழைப்பு கிடைக்கும்.

உங்கள் கற்பனை மனைவி எப்படிப்பட்டவளாக இருக்கின்றார்? என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

எதிர்கால மனைவியை தேர்ந்து எடுக்கும்போது இந்த அனுபவம் மிகுந்த பயன் கொடுக்கும் என்கிறார் இந்த இணைய சேவை வழங்குனர்கள்
Continue reading →

வரும் 11-11-11ம் தேதியில் குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பமா?



வரும் 11-11-11ம் தேதியில் குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பமா? இம்மாத இறுதிக்குள் கர்ப்பம் தரிக்க வேண்டும் என, டாக்டர்கள் கூறுகின்றனர்.

"விசேஷ தேதி, நேரத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என, யாரும் திட்டமிட்டு கருத்தரிப்பதில்லை. திட்டமிட்ட கருத்தரிப்புகளில் ஏற்படும் பிரச்னைகள் காரணமாகவே, பெற்றோர் அதை விரும்புவதில்லை' என, ஒரு சில மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மகப்பேறு மருத்துவர் ஒருவர் கூறியதாவது: கருத்தரிப்பது பற்றியும், குழந்தை பிறக்கும் நேரம் பற்றியும் இன்றைய பெற்றோர் பல்வேறு கற்பனைகள் கொண்டுள்ளனர்.

இருந்தாலும், டாக்டர்களாகிய எங்களால், திட்டமிட்ட பிரசவத்திற்கான உத்தரவாதம் எதுவும் தரமுடியாது; பிரசவ காலத்தையும் சரியாக கணித்துக் கூறமுடியாது. விசேஷ தினங்களில்தான் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் எனும் எண்ணத்தை இன்றைய பெற்றோர் கைவிட வேண்டும்.

எனினும், வரும் நவம்பர் மாதம் 11-11-11ல் தங்களுக்கு குழந்தை பிறக்க வேண்டும் என நினைப்பவர்கள், இம்மாத இறுதிக்குள் கருத்தரிக்க வேண்டும். அப்போது தான், மேலே குறிப்பிட்ட தேதியில், குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்.

அதே சமயம், உரிய தேதியில் தான் குழந்தை பிறக்க வேண்டும் என நினைத்து கருத்தரிக்கும் பலரும், அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மற்றொரு மருத்துவர் கூறுகையில், "திட்டமிட்ட பிரசவம் சாத்தியமானது தான். முன்கூட்டியே திட்டமிடுதலில் தவறில்லை. ஆனால், பிரசவ காலத்தில் தேவையற்ற சிக்கல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இருந்தும், முன்கூட்டியே திட்டமிடப்படும் பல பிரசவங்கள், தவறி விடுவதும் உண்டு' என்கிறார். இந்த புத்தாண்டில், (1-11-11; 11மணி மற்றும் 11 நிமிடம்) குழந்தை பெற்ற சீமா தசீம் கூறுகையில், "எனது கருத்தரிப்பு, திட்டமிட்டு நடந்ததல்ல.

இருந்தும், "குறிப்பிட்ட காலத்தில்தான் குழந்தை பிறக்கும்' என டாக்டர்கள் கூறிய பின் தான், நாங்கள் குறிப்பிட்ட நேரத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்தோம்' என்றார்.

அதே தினம் மற்றும் நேரத்தில் பிறந்த மற்றொரு குழந்தையின் தந்தை அப்துல் கரீம், "பிரசவத்தில் சிக்கல் ஏற்படக் கூடாது என நினைத்து, டாக்டர்கள் தான் "சிசேரியன்' செய்து, குழந்தையை வெளியே எடுத்தனர்' என, தெரிவித்தார்
Continue reading →

பென் டிரைவை எவ்வளவு நாளைக்குப் பாவிக்கலாம்?



உங்களின் பிளாஷ் ட்ரைவ் எத்தனை நாளைக்கு கெட்டுப் போகாமல் இருக்கும் என்று தெரியுமா?

ஏனென்றால் பிளாஷ் ட்ரைவ் குறித்த இந்த கேள்விக்கு எந்த நிறுவனமும் பதில் கொடுத்தது இல்லை.

இது குறித்த சில அடிப்படைத் தகவல்களை இங்கு பார்க்கலாம். பிளாப்பியில் மேற்கொள்வது போல பிளாஷ் ட்ரைவிலும் தொடர்ந்து பைல்களை எழுதலாம்; அழிக்கலாம் மற்றும் அதன் மேலேயே எழுதலாம்.

அந்த அளவிற்கு இவை மிகவும் உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அப்படியானால் எத்தனை முறை இது போல நாம் அழித்து அழித்து எழுத முடியும்? ஒரு தடவை அழித்து எழுதுவதை ஒரு சைக்கிள் (சுற்று) என அழைக்கின்றனர்.

அப்படிக் கணக்கு பார்த்தால் பல நூறு ஆயிரம் முறை இந்த சுற்றினை மேற்கொள்ளலாம். ஆனால் நாள் ஆக ஆக இந்த சுற்று மிக மெதுவாக மேற்கொள்ளப்படும். இதிலிருந்து பிளாஷ் ட்ரைவிற்கு வயதாகிவிட்டது என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம்.

எந்நேரமும் அது தன் செயல்பாட்டை நிறுத்திவிடும் என்றும் முடிவெடுக்கலாம். ஆனால் அது எப்போது என்பது உங்களின் செயல்முறையைப் பொறுத்தும் உள்ளது.

எத்தனை முறை அடிக்கடி பயன்படுத்துகிறீர்கள், எவ்வளவு அளவிலான பைல்களை எழுதுகிறீர்கள், மற்ற விஷயங்களுக்கு இந்த ட்ரைவைப் பயன்படுத்துவது மற்றும் உங்கள் கம்ப்யூட்டரின் சிபியு வேகம் என்ற விஷயங்களைப் பொறுத்து உங்கள் பிளாஷ் ட்ரைவ் தன் செயல்பாட்டை இழந்து ஒரு கட்டத்தில் முடித்துக் கொள்ளும்.

கவலைப் படாதீர்கள். பொதுவாக நீங்கள் செலுத்திய பணத்திற்கேற்ப பிளாஷ் ட்ரைவ்கள் பல காலம் உழைக்கும்.

உங்களுக்கே அலுத்துப் போகும் போதுதான் அல்லது வேறு ட்ரைவ்களின் பால் மனது செல்லும் போதுதான் இதன் பயன்தன்மை நிற்கும்
Continue reading →

Sunday, February 6, 2011

ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்!


பெண்ணின் முகத்தில் ஏகப்பட்ட உணர்வுகளை பார்க்க முடியும். அவர் சோகமாக இருக்கிறாரா, சந்தோஷமாக இருக்கிறாரா, எதையாவது நினைத்துக் கொண்டிருக்கிறாரா, அவரை நம்பலாமா, கூடாதா, கடவுள் நம்பிக்கை கொண்டவரா .. இப்படி ஏகப்பட்ட விஷயங்களை ஒரு பெண்ணின் முகத்திலிருந்து தெரிந்து கொள்ளலாமாம். ஆனால் ஆண்கள் முகத்தைப் பார்த்தால் ஒன்றையும் புரிந்து கொள்ள முடியாதாம்.



காரணம் ஆண்களின் முகத்திற்கு ஏகப்பட்ட உணர்வுகளை வெளிக்காட்டும் திறமை கிடையாதாம். இந்த ஆய்வை மேற்கொள்வதற்காக ஒரு ஆயிரம் ஆண், பெண்களை எடுத்துக் கொண்டனர். அவர்களின் புகைப்படங்களை இணையதளத்தில் இடம் பெற வைத்தனர். ஏற்கனவே அவர்கள் குறித்த தகவல்களை வாங்கி வைத்துக் கொண்டனர். இது தவிர புகைப்படங்களைப் பார்த்து கருத்து சொல்வோருக்காக கேள்விகளையும் தயார் செய்தனர்.



பின்னர் புகைப்படங்களை இணையதளத்தில் பிரசுரித்து, அந்தப் பெண்களின் முகங்களைப் பார்த்தால் உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது என்று கேள்வி கேட்டிருந்தனர். இந்த இணையதளத்திற்கு கிட்டத்தட்ட 6500 பேர் வருகை தந்து அதில் இடம் பெற்றிருந்த பெண்களின் முகத்தைப் பார்த்து அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள், அவர்களைப் பார்த்தால் எப்படித் தோன்றுகிறது என்பதைத் தெரிவித்திருந்தனர்.
Continue reading →

Friday, February 4, 2011

பார்வையாளர்களைக் கவர்ந்த இரட்டைத் தலைப் பாம்பு!


சுவிட்ஸர்லாந்தில் உள்ள பேஸல் நகரில் இடம்பெற்ற ஒரு மிருகக் கண்காட்சியில் அனைவரினதும் கவனத்தை ஈர்த்தது இந்த இரட்டைத் தலைப் பாம்பு தான்.

இவ்வாறு இரண்டு தலைகள் கொண்ட பாம்புகள் உலகில் எட்டு இருப்பதாக இதன் உரிமையாளர் டொம் பெஸர் கூறினார்.

ஒரு பார்வையாளர் 13000 பவுண் கொடுத்து இந்தப் பாம்பை வாங்க முன்வந்தும் அதை விற்க பெஸர் மறுத்துவிட்டார்.

இதன் உண்மையான பெறுமதி அதைவிட அதிகம் என்று அவர் கூறுகின்றார்.
Continue reading →

இன்டர்நெட்! ஏமாறாமல் இருக்க பாதுகாப்பான வழிகள்!


இன்டர்நெட் மற்றும் இமெயில் வழி பலர் ஏமாற்றப்படுவதாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

சிறிது சலனப் பட்டாலும், நாம் நிதானம் தவறி, நம்மை ஏமாற்றத் திட்டமிடுபவர்களின் வலைகளில் விழுந்து நம் நிம்மதியை, நிதியை இழந்துவிடுகிறோம்.

இது போல பலியாகாமல் இருக்க, நாம் எடுக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கைகளை இங்கு பார்க்கலாம்.

1. முன்பணம் கட்டாதீர்கள்:

ஏமாற்றப்படும் பல வேளைகளைப் பட்டியலிட்டால், முன் பணம் கட்டச் சொல்லி அழைக்கும் அழைப்புகளுக்குப் பலியாவோரே அதிகமாய் இருப்பதைப் பார்க்கலாம். பெரிய பரிசு உள்ளது, கடன் தீர்க்கப் பணம் தருகிறோம், பெரிய வேலை உங்களுக்கு மட்டுமே தருகிறோம், இலவசமாய் இயக்கிப் பார்க்கலாம் என செய்திகளைத் தந்து, தூண்டிலிட்டு, பின்னர் அதற்கு சரி என்கையில், முன் பணமாக ஒரு தொகையை செலுத்தச் சொல்லி அழைப்பு வரும். இதனை மிக அழகாக நியாயப்படுத்தியும் செய்தி தரப்படும்.

பெரிய அளவில் தான் பணம் அல்லது உதவி கிடைக்கப் போகிறதே, செலுத்தினால் என்ன என்று ஒரு கணம் எண்ணிவிட்டால், உங்கள் பணம் அவ்வளவு தான். அல்லது தொடர்ந்து மேலும் மேலும் பணம் செலுத்த கட்டாயப்படுத்தப்படுவீர்கள். இது போல செய்திகளை, அது எந்த இடத்திலிருந்து வந்தாலும் உதாசீனப் படுத்திவிடுவதே, நாம் பலியாகாமல் இருக்க ஒரே வழி.

2. அக்கவுண்ட் எண் தரலாமா?

மெயில்களை அனுப்பி உங்களை வீழ்த்தும் பெரும்பாலான ஸ்கேம் செய்திகளில், உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் எண், நெட்பேங்கிங் பாஸ்வேர்ட் கேட்டு வரும் மெயில்களே அதிகம். அக்கவுண்ட் எண் மற்றும் தகவல்களைக் கொடுத்துவிட்டால், உங்கள் அக்கவுண்ட் அவ்வளவுதான்.

பைசா கூட அதில் இருக்காது. நீங்கள் சரியான இணைய தளத்தில் பொருள் வாங்குவதாக இருந்தாலும், உங்கள் கிரெடிட் கார்டை மட்டுமே பயன்படுத்தவும்.

3. தானாக தனி நபர் தகவல் தரலாமா?

ஒரு சிலர் மெயில் செய்தியில் வரும் ஏமாற்று வார்த்தைகளை நம்பி, தங்களைப் பற்றிய தனி நபர் தகவல்களைத் தந்துவிடுவார்கள். சிலர் தாங்கள் பணியாற்றும் நிறுவனம் குறித்த தகவல்களையும் தங்களை அறியாமல் தந்து மாட்டிக் கொள்வார்கள். இது போன்ற விஷயத்தில் அதிகக் கவனத்துடன் நடந்து கொண்டு, மாட்டிக் கொள்ளும் நிகழ்வினைத் தவிர்க்க வேண்டும்.

4.போலி பேஸ்புக் செய்திகள்:

பேஸ்புக்கில் அக்கவுண்ட் இல்லாமல் இருந்தால் கூட, உங்கள் அக்கவுண்ட்டிற்குப் பலவாரியாக செய்திகள் வரும். புகழ்பெற்றவர்கள் மாட்டிக் கொண்டார்கள் - அது பற்றி அறிய வேண்டுமா என ஒரு செய்தி உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டை ஒருவர் நீக்கிவிட்டார், நீக்கியவர் யாரெனத் தெரியும். மீண்டும் அக்கவுண்ட் தொடங்கலாமே என்று ஒரு செய்தி வரும். இது போன்ற செய்திகள் எல்லாம், உங்களைச் சிக்க வைக்கத்தான்.

5. வீடு தேடி வரும் பொருட்களை இணைய தளத்தில் வாங்க வேண்டாம்:

இணைய தள வர்த்தகம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. பலர் இதில் பொருட்களை வாங்கிப் பயன் பெற்று வருகின்றனர். ஆனால், நாம் நாள்தோறும் நம் வீட்டு வாசலில் விற்பனை செய்யப்படும், அடுத்த கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை, இணைய தளத்தில் வாங்க வேண்டுமா? விலை குறைவாகக் காட்டிப் பின்னர், அனுப்பும் செலவு, செயல்படும் செலவு, இணைய வரி எனப் பல தலைப்புகளில் காசைக் கறந்துவிடுவார்கள்.

6. பாதுகாப்பு வழிகளைக் கடைப் பிடியுங்கள்:

இந்த மலரில் பல முறை ஆன் லைன் வர்த்தகத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை எழுதி வந்திருக்கிறோம். அவற்றை அவசியம் கடைப்பிடிக்கவும்.

இணையத்தில் எப்போதும் நாம் ஏமாற்றப்பட்டு விடுவோம் என்ற எச்சரிக்கையுடனேயே அதனை அணுகினால், நிச்சயம் நீங்கள் பலியாக மாட்டீர்கள்
Continue reading →

பேஸ்புக் பாவனையாளர்களின் கவனத்துக்கு!



இணையத்தள சமூக வலையமைப்பான பேஸ்புக்கைப் பாவிப்பவர்கள் இன்னொரு விடயத்திலும் இப்போது கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

பேஸ்புக் வலையமைப்பு இப்போது காப்புறுதிக் கம்பனிகளால் அவதானிக்கப்பட்டு வருகின்றமை அண்மைய சம்பவம் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

நதாலி புலன்சார்ட் என்ற முப்பது வயதுப்பெண் மொன்றியலைச் சேர்ந்தவர் IBM நிறுவனத்தில் தொழில்நுட்பவியலாளராகப் பணிபுரிபவர். 2008 ல் இவர் அழுத்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளதாகக் கூறி மருத்துவ விடுமுறை எடுத்தார்.

இவருக்கு மாதாந்த மருத்துவக் காப்புறுதி நலக் கொடுப்பனவுகளும் கிடைக்க ஆரம்பித்தன. இவ்வாறு ஒரு வருடம் கழிந்த நிலையில் எவ்வித அறிவிப்பும் இன்றி இவருக்கான கொடுப்பனவுகள் திடீரென நிறுத்தப்பட்டன.

ரொறன்ரோ காப்புறுதிக் கம்பனியில் இது பற்றி விசாரித்தபோது தான் விடயம் தெரியவந்தது. இந்தப் பெண் பேஸ்புக்கில் அண்மையில் பாவித்துள்ள படங்களை இந்த நிறுவனம் அவதானித்துள்ளது.

அதில் அவர் ஒரு கடற்கரை மற்றும் களியாட்ட விடுதி என்பனவற்றில் உல்லாசமாக இருக்கும் படங்களை இந்தப் பெண் வெளியிட்டுள்ளார். இந்தப் படங்களின் பிரகாரம் அவருக்கு தற்போது மன அழுத்தங்கள் எதுவும் கிடையாது என்ற முடிவுக்கு வந்த காப்புறுதி நிறுவனம் அவருக்கான மாதாந்த மருத்துவ நலக் கொடுப்பனவுகளை நிறுத்திக் கொண்டது.

இந்தப் படங்களைப் பார்த்தபின் எந்தவிதமான விசாரணைகளையும் மேற்கொள்ளாமல் இவர் மோசடி புரிவதாகக் கருதி காப்புறுதி நிறுவனம் கொடுப்பனவுகளை நிறுத்திக் கொண்டது.

ஆனால் தனக்கு இழைக்கப்பட்டது அநீதி என்றும், தனது வைத்தியருடன் கலந்து பேசாமல், தனக்கு எவ்வித அறிவித்தலும் வழங்காமல் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்மைக்காக அந்தப் பெண் மேற்படி நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளார்
Continue reading →

Online Details

 

dishunters

Copyright 2010 யாழின் விடியல். All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog