
இணையத்தள சமூக வலையமைப்பான பேஸ்புக்கைப் பாவிப்பவர்கள் இன்னொரு விடயத்திலும் இப்போது கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
பேஸ்புக் வலையமைப்பு இப்போது காப்புறுதிக் கம்பனிகளால் அவதானிக்கப்பட்டு வருகின்றமை அண்மைய சம்பவம் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
நதாலி புலன்சார்ட் என்ற முப்பது வயதுப்பெண் மொன்றியலைச் சேர்ந்தவர் IBM நிறுவனத்தில் தொழில்நுட்பவியலாளராகப் பணிபுரிபவர். 2008 ல் இவர் அழுத்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளதாகக் கூறி மருத்துவ விடுமுறை எடுத்தார்.
இவருக்கு மாதாந்த மருத்துவக் காப்புறுதி நலக் கொடுப்பனவுகளும் கிடைக்க ஆரம்பித்தன. இவ்வாறு ஒரு வருடம் கழிந்த நிலையில் எவ்வித அறிவிப்பும் இன்றி இவருக்கான கொடுப்பனவுகள் திடீரென நிறுத்தப்பட்டன.
ரொறன்ரோ காப்புறுதிக் கம்பனியில் இது பற்றி விசாரித்தபோது தான் விடயம் தெரியவந்தது. இந்தப் பெண் பேஸ்புக்கில் அண்மையில் பாவித்துள்ள படங்களை இந்த நிறுவனம் அவதானித்துள்ளது.
அதில் அவர் ஒரு கடற்கரை மற்றும் களியாட்ட விடுதி என்பனவற்றில் உல்லாசமாக இருக்கும் படங்களை இந்தப் பெண் வெளியிட்டுள்ளார். இந்தப் படங்களின் பிரகாரம் அவருக்கு தற்போது மன அழுத்தங்கள் எதுவும் கிடையாது என்ற முடிவுக்கு வந்த காப்புறுதி நிறுவனம் அவருக்கான மாதாந்த மருத்துவ நலக் கொடுப்பனவுகளை நிறுத்திக் கொண்டது.
இந்தப் படங்களைப் பார்த்தபின் எந்தவிதமான விசாரணைகளையும் மேற்கொள்ளாமல் இவர் மோசடி புரிவதாகக் கருதி காப்புறுதி நிறுவனம் கொடுப்பனவுகளை நிறுத்திக் கொண்டது.
ஆனால் தனக்கு இழைக்கப்பட்டது அநீதி என்றும், தனது வைத்தியருடன் கலந்து பேசாமல், தனக்கு எவ்வித அறிவித்தலும் வழங்காமல் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்மைக்காக அந்தப் பெண் மேற்படி நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளார்
0 comments:
Post a Comment