Friday, September 9, 2011

தங்கம் உருவான கதை

ங்கம் மற்றும் பெருமதிப்பு வாய்ந்த தனிமங்கள் எங்கிருந்து வந்தன என்பது குறித்து புதிய ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

அவை அனைத்தும் அண்ட வெளியிலிருந்து பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு வந்தன என்பதுதான் தற்போது அறிவியலாளர்கள் கூறும் செய்தி.

இந்த கண்டுபிடிப்பு குறித்த தகவல்களை இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களே தெரிவித்துள்ளனர். கீரீன்லாண்டில் நான்கு பில்லியன் ஆண்டுகள் பழமையான படிமங்களை அராய்ந்த பிறகே தாங்கள் இந்த முடிவுக்கு வந்ததாக அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தப் படிமங்களில் இருந்த ஐசோடோப்புகள், பூமியிலிருந்து உருவான ஐசோடோப்புகளிலிருந்து தெளிவாக மாறுபட்டிருந்ததை பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

எனவே தங்களது இந்தக் கண்டுபிடிப்பானது, நாம் வாழும் பூமி சுமார் இருநூறு மில்லியன் வருடங்கள் பழமையானதாக இருக்கும் போது, அண்ட வெளியிலிருந்து வந்த மிகப்பெரிய எரிகற்களின் மோதல் காரணமாக, இன்று நாம் பயன்படுத்தும் பெருமதிப்பு வாய்ந்த இந்தத் தனிமங்கள் பூமியை வந்தடைந்தன என்கிற கோட்பாட்டை உறுதிபடுத்துகின்றது என்று அந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பூமியின் ஆரம்பகாலங்களில் இந்த மோதல்கள் காரணமாக கொதித்து உருகிய நிலையில் இருந்த புவியின் மையப் பகுதிக்குள் தங்கம் மற்றும் இதர பெருமதிப்பு வாய்ந்த இந்தத் தனிமங்கள் மூழ்கின என்றும் அந்த ஆய்வுகள் கூறுகின்றன.

ஆனால் நாம் நமது திருமண மோதிரங்கள் போன்றவற்றில் பயன்படுத்தும் தங்கமானது எப்படி உருவானது என்கிற கதை இன்னமும் ஆச்சரியாமாக உள்ளது.

இந்தப் பிரபஞ்சத்தில் இதுவரை பார்த்திராத வகையில், அனுவின் ஒரு உட்கருவான நியூட்ரான்களின் மிகச் சக்தி வாய்ந்த மோதல்களிலேயே நாம் இன்று பயன்படுத்தும் தங்கம் உருவானது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
Continue reading →

விஜய் அழைப்பு .

Continue reading →

நடிகை காந்திமதி காலமானார்

உடல்நலக்குறைவு காரணமாக நடிகை காந்திமதி(65) இன்று காலமானார். கடந்த 6 மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வீட்டிற்கு வந்த அவர் இன்று சென்னை வடபழனியில் உள்ள அவரது வீட்டில் காலமானார். 


நடிகை காந்திமதியின் உடல் அடக்கம் இன்று மாலை நடைபெறுவதாக அவரது மகன் தீனதயாளன் தெரிவித்துள்ளார்.

பதினாறு வயதினிலே படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை காந்திமதி. பல விதமானகேரக்டர்களில் நடித்து அசத்தியவர்.

கரகாட்டக்காரன், மாணிக்கம், வால்டர் வெற்றிவேல், சின்னதம்பி பெரிய தம்பி, அகல் விளக்கு, ஆணழகன், அமைதிப்படை, அம்மன் கோவில் வாசலிலே, அன்பு தோழி, அத்தைமகள் ரத்தினமே, சிதம்பர ரகசியம், மண்வாசனை, காதல் ஓவியம், கும்பக்கரை தங்கையா, முத்து, ராசைய்யா, சிம்லா ஸ்பெஷல், உயிர் உள்ளவரை உஷா, இது நம்ம பூமி, தவசி, ஐயா உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
Continue reading →

வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!

பாக்கிஸ்தானில் பெண் ஒருவர் தனது வயிற்றில் வளரும் மிகப்பெரிய பாம்பினை அகற்றுவதற்கு மேலதிகாரிகளிடம் உதவிகோரியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான் ஊடக தகவல்களின்படி லாகூர் வடக்கு பிரதேசத்தை சேர்ந்த 50 வயதான Rasheedan Bibi தற்செயலாக பல மாதங்களுக்கு முன் தண்ணீர் குடிக்கும் போது அதற்குள் கிடந்த சிறிய பாம்பை காணாமல் அந்த தண்ணீரை குடித்திருக்கிறார்.
பின்னர் நாட்கள் செல்ல செல்ல அவரது வயிற்றுக்குள் இருந்து பாம்பு சிறிது சிறிதாக வளரத்தொடங்கியுள்ளது. காலப்போக்கில் இவரது வயிறு வீங்கி நிலமை மோசமான போது இவர் கர்ப்பமாகியுள்ளார் என நம்பப்பட்டது. எனவே வைத்திய உதவியை நாடினார் இவர்.
7 மாதங்களின் பின்னர் இவரது வயிற்றுக்குள் வளர்வது என்ன என்பதை வைத்தியர்கள் பரிசோதித்து பார்த்த போது அங்கே சுருண்டு படுக்கும் பெரிய பாம்மை கண்டு வியந்து போயுள்ளார்கள்.
ஏழைக்குடும்பத்தில் பிறந்த இந்த பெண் அதனை அகற்றுவதற்கு வசதி இல்லாத காரணத்தால் அவளது வயிற்றில் வளரும் ராட்சத பாம்பை அகற்ற உள்ளுர் அதிகாரிகளிடமும் உதவி கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Continue reading →

Online Details

 

dishunters

Copyright 2010 யாழின் விடியல். All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog