Thursday, December 30, 2010

பெண்ணின் மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்து?


அமெரிக்க இண்டியானா மாநிலத்திலுள்ள கரென் சிக்லர் என்ற பெண் தனது மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்துவின் உருவம் தெரிவதாக தெரிவிக்கின்றார்.

எல்வூட் நகரில் வசிக்கும் கரென் சிக்லர் கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க இதை click here



நன்றி உங்கள் வரவிற்கு மீண்டும் வருக

Continue reading →

Wednesday, December 29, 2010

Photos

Click Here...



நன்றி உங்கள் வரவிற்கு மீண்டும் வருக

Marquee

Continue reading →

Sunday, December 26, 2010

விழித்திடு மனமே!!!


இன்றைய சமுதாயமும் அதன் பாரம்பரியமும் சீர்குலைந்து செல்கின்றது ,,இதற்கு காரணம் இளைஞர்களின் அசாதாரண நிலை தான் காரணம்.இதற்கு நாம் சொல்லும் காரணம் வேற்றுநாட்டவரின் வருகை,வேற்றுஇனத்தவரின் வருகை,பேஸ்புக்கின் வருகை என பிறர் மீது குற்றம் சுமத்துகின்றோம்.சிந்தித்து பார்க்கும் போது நாம நாம ஒழுக்கமாய் இருந்தால் ஏன் மற்றவர்கள் மீது குற்றம் சுமத்த வேண்டும்?



ஒவ்வரு சமுதாயத்திற்கும் என்றும் ஒவ்வரு பாரம்பரியம் காணப்படுகின்றது.அதே போன்று நமது சமுதாயத்திற்கு என்றும் தனிப்பட்ட பாரம்பரியம் காணப்படுகின்றது.அது ஏனைய தேசத்தை விடவும் மாறானது.எப்படியும் வாழலாம் என்பதை விட இப்படித்தான் வாழவேண்டும் என்பது தான் எமது கலாச்சார பாரம்பரியம்.

இன்று எமது சமுதாயத்தை சீர்குலைக்கும் முக்கிய காரணமாய் காணப்படுவது இளவயதுக்கர்ப்பம்.அதுவும் பாடசாலை மாணவர்களால் ஏற்படுகின்றது .பெண்ணியம் என்பது புனிதமானது அதனை இன்று சிதைக்கின்றனர்.பெண்களை பார்க்கும் போது கை எடுத்து கும்பிட வேண்டுமே தவிர கை தட்டி சிரிக்க கூடாது .

பெற்றோர்கள் பிள்ளைகளை ஒழுக்கமாகத்தான் வளர்கின்றனர்கள்.அவர்கள் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்து உள்ளனர்.அதை பிள்ளைகள் தான் தவறாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.இப்படித்தான் பெண்கள் இருப்பார்கள் என்று தெரிந்திருந்தால் அன்று பாரதி பெண் சுகந்திரம் பற்றி பேசி இருக்கமாட்டார்.பெண்கள் ஜான்சி ராணி மாதிரி வீரச பெண்ணாக காணப்படா விட்டாலும் சமுதாயம் சீர்குலைய காரணமாய் இருக்க கூடாது ..

இன்றைய இளைஞர்கள் ஒரு சமுதாயத்தை கட்டி எழுப்ப வேண்டுமே தவிர ஒரு சமுதாயம் சீர்குலைய காரணமாய் இருக்க கூடாது.அதற்கு ஒவ்வருவரும் சிந்திக்க வேண்டும்.சிந்தனைகள் பலமானதாக காணப்பட்டால் நடத்தைகளும் நல்லமுறையில் அமையும் .எமது சமுதாயம் மலை போன்றது அதை காற்றடித்து சாய விடக்கூடாது.ஒவ்வரு குடிமகனும் விழித்திருக்க வேண்டும் ......
விழித்து எழு மனமே .................

நன்றி உங்கள் வரவிற்கு மீண்டும் வருக

Home

Continue reading →

Tuesday, December 21, 2010

யாழ்ப்பாணத்தில் விண்ணை நோக்கி தண்ணீர் பாய்ந்த அதிசயம்

முதலாவது சம்பவம்




இரண்டாவது சம்பவம்



நன்றிகள்:-Yarlnews
Continue reading →

Saturday, December 18, 2010

உலகின் மிகச்சிறிய குரங்கு







உலகத்திலேயே மிகச்சிறிய குரங்கினத்தினை Marmouset என அழைக்கிறார்கள். இது பிரஞ்சுக் சொல்லாகும். அதன் அர்த்தம் குள்ள மனிதன், குறுனி இறால் எனப்படுமாம். இந்தவகை Marmousetகள் பிரேஸில், பெரு, கொலம்பியா போன்ற நாடுகளின் மழைக்காடுகளில் வசிக்கின்றனவாம். இதனுடைய வளர்ச்சி 5 தொடக்கம் 6 அங்குலங்கள்தான் இருக்குமாம்... (வால் தவிர்த்து). மிகவும் அபூர்வமாக 6 தொடக்கம் 8 அங்குலங்களும் வளரக் கூடியனவாம். இந்த சிறியவகை குரங்குகள் பெரும்பாலும் மரத்தின் உச்சியில்தான் குடிகொள்கின்றனவாம். ஆகையினால் இவற்றினை நீங்கள் புகைப்படங்களில்தான் பார்க்க முடியும். காட்டினுள் சென்று பார்ப்பவர்களுக்குக் கூட இதன் அசைவுகளைக் கண்டுபிடிப்பது கடினம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
Continue reading →

Saturday, December 11, 2010

பாரதி எனும் சுப்பிரமணிய பாரதியார்!


அரிது அரிது மானிடராதல் அரிது. அதனினும் கூன் குருடுசெவிடு நீங்கிப் பிறத்தல் அரிது என்பதோடு மட்டும் ஒளவை தனது பாடலை நிறுத்திவிட்டார்.
வளர்ந்து வரும் மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும், எடுக்கவும் கொடுக்கவும் கூடிய சமுதாய அமைப்பை இப்பொழுது பெற்று வருகிறோம். எனவே தானமும் தவமும்கூட எந்த ஒரு விதத்திலாவது செய்துவிட முடியும்.
இத்தனைக்க மேல் ஒருவன் கவிஞனாகப் பிறக்கிறான் என்றால் அது எத்தனையோ நூற்றாண்டுக்கு ஒரு முறை நிகழும் நிகழ்ச்சி என்றுதான் கூறமுடியும். கம்பனுக்குப் பின் தமிழ் மக்கள் உள்ளத்தில் நிலைத்து நின்று வரும் கவிஞர் சுப்ரமணிய பாரதியார் ஒருவரே.
தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு எத்தனையோ தேசியத் தலைவர்களைப் பெற்றெடுத்த பெருமை உண்டு. வ.உசி. சுப்ரமணிய சிவா, வாஞ்சிநாதன் போன்றவர்கள் அதே மாவட்டத்தில் பிறந்தவர்கள். எட்டையபுரத்தில் 1882ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி சின்னச்சாமி அய்யருக்கும் லெட்சுமி அம்மாளுக்கும் பிறந்த குழந்தைதான் நமது சுப்ரமணிய பாரதியார்.
அவர் இளமையிலேயே கவிபாடக்கூடிய திறமை பெற்றிருந்தார். பதினொரு வயது நிரம்பிய சுப்பையா என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவரை எட்டையபுரம் சமஸ்தானப் புலவர்கள் பற்பல சோதனைக்கு உட்படுத்தினர். அவைகளில் வெற்றி பெற்றதால் அந்தப் புலவர்கள் வியந்து அளித்த பட்டம் 'பாரதி'.
அவர் 1894-1897 வரை திருநெல்வேலி ஹிந்துகல்லூரி உயர்நிலைப்பள்ளியில் ஐந்தாம் படிவம் வரை படித்தார். படிக்கும் போதே தமிழ்ப் பண்டிதர்களுடன் ஏற்பட்ட சொற்போர் காரணமாக 14 வயதிலேயே அக்கால வழக்கப்படி திருமணம் நடந்தது. 7 வயது நிரம்பிய செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
1898-1902 வரை காசியில் தனது அத்தை குப்பம்மாள் அவர்களுடன் தங்கியிருந்தார். அப்போது அலகாபாத் சர்வகலாசாலையில் பிரவேசத் தேர்வு எழுதி வெற்றிப்பெற்றார். காசி இந்து சர்வகலாசாலையில் ஹிந்தியும், வடமொழியும் பயின்றார். அப்போதுதான் நமது பாரதியாருக்கு தலைப்பாகை கட்டும் பழக்கமும் மீசை வைத்துக் கொள்ளும் பழக்கமும் ஏற்பட்டதாக அறிகிறோம். மீண்டும் எட்டையபுரம் வந்து 1902 முதல் இரண்டாண்டு காலத்திற்கு எட்டையபுரம் மன்னருக்குத் தோழனாக இருந்தார். அப்போதுதான் மதுரையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த 'விவேகபாநு' என்ற பத்திரிகையில் இவரது முதல் பாடல் 'தனிமை இரக்கம்' அச்சாகி வெளியிடப்பட்டது.
1904ம் ஆண்டு மதுரையில் உள்ள சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
அதே ஆண்டு நவம்பரில் சென்னையிலிருந்து வெளிவரும் 'சுதேசமித்திரன்' பத்திரிகைக்கு உதவியாசிரியரானார். பின்பு 'சக்கர வர்த்தினி' என்ற பத்திரிகையின் ஆசிரியராக ஆனார்.
1905ம் ஆண்டில் பாரதியார் அரசியலில் ஈடுபட்டு இருந்தார். தீவிரமாக உழைக்க ஆரம்பித்தார்.
1906ல் சென்னையிலிந்து 'இந்தியா' என்ற வாரப் பத்திரிகை துவங்கி அதன் மூலம் தனது அரசியல் கருத்துக்களை இந்நாட்டு மக்களிடம் பரப்பினார். அப்போது திருமலாச் சாரியார். வ.உ.சி. சர்க்கரைச் செட்டியார் முதலியோரின் நட்புக் கிடைத்தது.
சூரத் காங்கிரசில் தீவிரவாதிகளுக்கும் மிதவாதிகளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசில் 1907ல் பிளவு ஏற்பட்டது. பாரதியார், திலகர் போன்ற தீவிரவாதிகள் பக்கம் நின்று பணியாற்றினார். அப்போது திலகர், லாலா லஜபதிராய், அரவிந்தர் முதலியோரைச் சந்தித்தார். கிருஷ்ணசாமி அய்யர் என்ற தேசபக்தர் பாரதியாரின் பாடல்களில் உள்ள வேகத்தின் தன்மையை உணர்ந்து 'சதேசகீதங்கள்' என்ற தலைப்பில் அவரது பாடல்கள் பலவற்றை அச்சிட்டு இலவசமாக விநியோகித்தார்.
1908ஆண்டு 'சுயராஜ்ஜிய தினம்' சென்னையிலும் தூத்துக்குடியிலும் கொண்டாடப்பட்டது. அதில் வ.உ.சி சுப்ரமணியசிவா போன்றவர்களுக்குச் சிறைத்தண்டனை கிடைத்தது. அந்த வழக்கில் பாரதியார் சாட்சியம் சொல்லியுள்ளார்.
அதே ஆண்டில் கிருஷ்ணசாமி அய்யர் அவர்கள் வெளியிட்ட 'சுதேச கீதங்கள்' என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பு ஒன்றை பாரதியார் வெளியிட்டார்.
இது வெளிவந்தபின், பிரிட்டிஷ் அரசாங்கம் பாரதியார் மீது ஒரு கண்ணோட்டம் விட்டது. 'இந்தியா' பத்திரிகையின் சட்ட ரீதியான ஆசிரியர் கைது செய்யப்பட்டு பாரதியார் மீது வாரண்ட் போட்டது. பாரதியார் தலைமறைவானார். புதுச்சேரி சென்றார். அங்கும் போலீஸ் தொல்லைகளுக்கு உட்பட்டார்.
அப்போது 'இந்தியா' பத்திரிகை 1910 வரை புதுச்சேரியிலிருந்து தனது தேசியத் தொண்டைத் துவங்கியது. எரிமலை வெடித்தது போன்ற எழுத்துக்களால் மக்களிடையே விடுதலை வேட்கையைப் பரப்பினார். இதனைக் கண்ட பிரிட்டிஷார் இந்தியா' பத்திரிகை வருவதைத் தடுத்தது. அத்துடன் பத்திரிகை, விற்பனைக் குறைவால் நின்று போயிற்று.
1911ல் மணியாச்சியில் கலெக்டர் ஆஷ்துரை சுட்டுக்கொல்லப்பட்ட போது புதுச்சேரியில் உள்ள தேசபக்தர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு அங்கு உள்ள தேசபக்தர்களுக்குத் தாங் கொணாத் துன்பத்தை ஆட்சியினர் கொடுத்தனர். மேலும் அவர்களை அங்கிருந்த வெளியேற்றவும் முயற்சிகள் நடைபெற்றன. பாரதியாரின் சீடர்கள் ஏராளமாயினர்.
பாரதியார் 1912-ல் கீதையை மொழி பெயர்த்தார். மேலும் கண்ணன்பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற காவியங்கள் எழுதப் பெற்றன. பாஞ்சாலி சபதம் வெளியிடப் பெற்றதும் இந்த ஆண்டில்தான்.
அடுத்த ஆண்டில் 'ஞானபாநு' என்ற பத்திரிகைக்குச் செய்திகள் சேகரித்துக் கொண்டிருந்தார். 1914ல் முதல் உலகப் போர் துவங்கியதும் அங்கு உள்ள தேசபக்தர்களுக்கு ஏராளமான தொல்லைகள் ஏற்பட்டன.
பரலி சு. நெல்லையப்பர் அவர்கள் 1917ல் கண்ணன் பாட்டு முதற்பதிப்பைச் சென்னையில் வெளியிட்டார்கள். அதைத் தொடர்ந்து 1918ல் 'சுதேச கீதங்கள்', 'நாட்டு பாடல்' முதலியன வெளியிடப்பட்டன.
புதுச்சேரி வாழ்க்கையில் ஏற்பட்ட சலிப்பு உணர்வால் பாரதியார் 1918ம் ஆண்டு நவம்பர் 20ந் தேதி அங்கிருந்து வெளியேறினார். அப்போது கடலூருக்கு அருகே கைது செய்யப்பட்டு, சில நாட்கள் சிறை இருந்த பின்னர் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையானவுடன் கடையத்துக்குச் சென்றார்.
1918 முதல் 1920 வரை கடையத்தில் வாழ்ந்து வந்த பாரதியார் எட்டையபுர மன்னனுக்கு சீட்டுக் கவிகள் மூலம் தன் நிலைமையைச் சொல்லியும் எவ்விதப் பயனும் ஏற்படாமல் சென்னைக்கு வந்தார். சென்னையில் ராஜாஜி அவர்கள் வீட்டில் மகாத்மா காந்தியைச் சந்தித்தார்.
1920ல் மீண்டும் சுதேசிமித்திரனுக்கு உதவியாசிரியரானார். பாரதியாரின் எழுத்துக்கள் அப்போது அதில் நிறைய இடம் பெற்றன.
1921ல் திருவல்லிகேணியில் கோயில் யானை ஒன்றால் தூக்கி எறியப்பட்டு, அதிர்ச்சியுற்று, நோய்வாய்ப்பட்டு 1921 செப்டம்பர் 11ம் தேதி நள்ளிரவுக்குப் பின் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை பெற்றார். உலக வாழ்விலிருந்து விடுதலை பெற்ற பாரதியார், உலக மக்களின் உள்ளங்களிடையே இன்னும் வாழ்ந்து வருகிறார். வாழ்க மகாகவி பாரதியார்.
நன்றி : ஸ்ரீ ஆனந்த நிலையம்
Continue reading →

Friday, December 10, 2010

யாழ் மாவட்ட மட்டத்தில் 35 மாணவர்களுக்கு 3 ஏ சித்தி


இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று முன்தினம் நாடு முழுவதும் இணையத்தளத்தில் வெளியாகின.


இதனடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 35 பேர் "3 ஏ' சித்தி பெற்று முன்னிலையில் உள்ளனர். இதில் யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களும் வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகளும் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவனும் முன்னணிப்பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.

கணித பிரிவில் வேம்படி மகளிர் கல்லூரி மாணவியான சுமங்கலி சிவகுமாரன் "3 ஏ' சித்திபெற்று மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தையும் உயிரியற் பிரிவில் ஹாட்லிக் கல்லூரி மாணவன் பாலகோபாலன் கோகுலன் 3 ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தையும் தேசிய மட்டத்தில் 3 ஆம் இடத்தையும் வர்த்தகப் பிரிவில் ஹாட்லிக் கல்லூரி மாணவன் புருஷோத்தமக் குருக்கள் ராஜாராம் "3 ஏ' சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தையும் கலைப்பிரிவில் கொடிகாமம் திருநாவுக்கரசு மகா வித்தியாலய மாணவன் குணசிங்கம் தர்மேந்திரன் 3 ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

கணித பிரிவில் 3 ஏ சித்தி பெற்றுள்ள யாழ் இந்துக் கல்லூரி மாணவர் விபரம் வருமாறு: லோ. கோபிநாத் (மாவட்ட மட்டத்தில் 8 ஆம் இடம்), அ. சசிந்தன், இ. ஸ்ரீசியாமளன், மு. பிருந்தாபன், ஜே. திரோஜன், சி.கௌதமன், பு. இரோஷன், ப. திருவரங்கன், வி. விபுலன். ஆகியோரும் வேம்படி மகளிர் கல்லூரியில் அனிதா கருணாகரனும் கொக்குவில் இந்துக் கல்லூரியில் சின்னக்கோன் சிந்துஜனும் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் சிறிகரன் யசோதரனும் (மாவட்ட மட்டத்தில் ஐந்தாமிடம்) உயிரியல் பிரிவில் 3 ஏ சித்தி பெற்றோர் யாழ் இந்துக் கல்லூரியில் சு. தினேஷாந் (மாவட்ட மட்டத்தில் 4ஆம் இடம்), கு. நிரூஜன் (மாவட்ட மட்டத்தில் 2 ஆம் இடம்) சி. யதுகுலனும் (மாவட்ட மட்டத்தில் 13 ஆம் இடம்) வேம்படி மகளிர் கல்லூரியில் பகீரதி அருணகிரிநாதன் (மாவட்ட மட்டத்தில் 9 ஆம் இடம்), ரேகா பாலசுப்பிரமணியம் (மாவட்ட மட்டத்தில் 10 ஆம் இடம்), தாரணி சுந்தரம் (மாவட்ட மட்டத்தில் 14 ஆம் இடம்), சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் திருமுருகதாஸ் விசாகன் (மாவட்ட மட்டத்தில் 6 ஆம் இடம்) ஆகியோர் சித்தி பெற்றுள்ளனர்.

வர்த்தப் பிரிவில் "3 ஏ' சித்தி பெற்றோர் வேம்படி மகளிர் கல்லூரியில் லக்லரெலா மரியதாஸ் (மாவட்ட மட்டத்தில் 3 ஆம் இடம்), நிவேதான கதிர்காமத்தம்பி (மாவட்டத்தில் 4 ஆம் இடம்), கொக்குவில் இந்துக் கல்லூரியில் சண்முகராஜா கிரிதரன் (மாவட்ட மட்டத்தில் 2 ஆம்இடம்), சுஜாதா குணபாலசிங்கம் (மாவட்ட மட்டத்தில் 5 ஆம் இடம்), மகேந்திரலிங்கம் சஜிவன் , சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் தம்பையா நிரோஜினி (மாவட்ட மட்டத்தில் 9 ஆம் இடம்), திருச்செல்வன் ஜெகன் . கலைப் பிரிவில் "3 ஏ' சித்தி பெற்றவர் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் யோகேஸ்வர சர்மா மயூரி (மாவட்ட மட்டத்தில் 4 ஆம் இடம்) நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் வர்த்தகப் பிரிவில் அம்பிகாநிதி கோகுலன் "3ஏ', சிவகணேசமூர்த்தி பவிதா 3ஏ யையும் கலைப்பிரிவில் சூசைதாசன் சாரங்கவாணி 2ஏபி, தெய்வேந்திரன் முகுந்தன் 2ஏபியையும் பெற்றுள்ளனர். வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் கணிதப் பிரிவில் திருவாசகர் காஞ்சனா "2ஏபி', விமலச்சந்திரன் யசோதா "2ஏபி', திருக்கேதீஸ்வரன் லச்சுவினி "2ஏபி', சச்சிதானந்தன் சுமணா "2ஏபி', பாலகிருஸ்ணன் நிர்விகலா 2ஏபி யையும் உயிரியல் பிரிவில் பாலசுப்பிரமணியம் ரேணுகா "2ஏபி', அருந்தவவிநாயகமூர்த்தி சுபாங்கி "2ஏபி', சரா புவனேஸ்வரன் துவாரகா "2ஏபி', ஞானரட்ணம் பவித்திரா "2ஏபி', கதிர்காமலிங்கம் சுவர்ணாங்கடி "2ஏபி', ருக்மணிகாந்தன் கம்சத்வனி "2ஏபி' யையும் வர்த்தகப் பிரிவில் அருட்சோதி கஜாந்தினி "2ஏபி', அருமைத்துரை ஜான்சிகா "2ஏபி', வெற்றிவேல் சிவனன் தயாளினி 2ஏபி, சிவகுமார் மதுஜா "2ஏபி', திருச்செல்வம் நிஷானி "2ஏபி' யையும், கலைப் பிரிவில் வேலாயுதம் சதானந்தி "2ஏபி', சிற்றம்பலம் எக்ஸ்ஷனா "2ஏபி' யையும் பெற்றுள்ளனர்.

கொக்குவில் இந்துக்கல்லூரியில் கணிதப் பிரிவில் பரமசோதி விஸ்ணுகாந்தன் "2ஏபி, குமாரசுவாமி அபிராம் "2ஏபி' யையும், விஞ்ஞானப் பிரிவில் சிவகுருநாதன் கஜானன் "2ஏபி' யையும், வர்த்தகப் பிரிவில் நித்தியானந்தம் டிலக்ஷி "2ஏபி', சிவஞானசுந்தரம் நிமலதீபன் "2ஏபி' யையும், கலைப் பிரிவில் இராஜசிங்கம் பிரபாஜினி "2ஏபி', பாலசிங்கம் ரெனீசன்2ஏபி யையும் பெற்றுள்ளனர்.

சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் கணிதப் பிரிவில் இராஜரத்தினம் பிரதீசன் "2ஏபி', ஜெயகணேசன் ஜெயதர்சினி "2ஏபி' யையும், உயிரியல் பிரிவில் இராஜலிங்கம் மாதங்கி "2ஏபி' யையும், கலைப் பிரிவில் நித்தியானந்தன் கீர்த்தனா "2ஏபி', கிருஷ்ணசாமி சுகிர்தனா"2ஏபி', மகாராசா தனுசாலினி "2ஏபி', குணராசா ஜெயசாமினி "2ஏபி', ஜெயக்குமார் கயந்தினி "2ஏபி' யையும் பெற்றுள்ளனர்.

நன்றி - யாழ் ஓசை
Continue reading →

Thursday, December 9, 2010

உயர் தரப் பிரிவுகளில் முன்னிலை பெறும் மாணவர்கள்

யாழ் மாவட்டத்தில் கலை, வர்த்தக, கணித, உயிரியற் பிரிவுகளில் முன்னிலை வகிக்கும் மாணவ,மாணவியர் விபரம் கீழே தரப்படுகிறது.

உயிரியற்பிரிவு - பருத்தித்துறையைச் சேர்ந்தவரும் ஹாட்லிக் கல்லூரி மாணவனுமாகிய பாலகோபாலன் கோகுலன் 3A பெற்று மாவட்டநிலையில் முன்னிலையில் உள்ளார்.

கணிதப்பிரிவு - வேம்படி மகளீர் கல்லூரி மாணவி சுமங்கலி சிவகுமாரன் 3A பெற்று முன்னிலையில் உள்ளார்.

வர்த்தகப்பிரிவு - வல்லிபுரம் விஷ்ணுவாலயத்தைச் சேர்ந்த புருஷோத்தமக்குருக்களின் ராஜாராம் 3A பெற்று முன்னிலையில் உள்ளார்.

கலைப்பிரிவு - கொடிகாமம் திருநாவுக்கரசு மகாவித்தியாலய மாணவன் குணசிங்கம் தர்மேந்திரன் 3A பெற்று முன்னிலையில் உள்ளார்.

இவர்களையும் மற்றும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற அனைவரையும் யாழ் மண் இணையத்தளம் வாழ்த்துகிறது. நம் பண்பாட்டையும் வாழ்வியலையும் உணர்ந்து மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறோம்.


thanks to
http://www.yarlmann.lk/


Continue reading →

Sunday, December 5, 2010

விழித்திடு......சமுதாயமே....

இன்றைய யாழ்ப்பாணத்தின் நிலையை நினைத்தால் கண்ணீர்த் துளிகள் மட்டுமே காணிக்கையாக எஞ்சி நிற்கும்.  இன்றைய பெண் சமுதாயமே ஒட்டு மொத்தமாக நாணி நிற்கவேண்டிய கேவல நிலை.

நன்கு பெயரறியப்பட்டு புகழின் உச்சத்தில் உள்ள சில பெண் பாடசாலை மாணவிகளின் ஒழுக்க நிலை மிகவும் வெட்கக்கேட்டை உருவாக்கியுள்ளது.

தமிழ்ப் பெண்களுக்கேயான தனித்தன்மை இழக்கப்பட்டு வருகின்றமையை நாம் தெளிவாக அவதானிக்கலாம். குறித்த மாணவிகள் இளவயது கற்பம் காரணமாக வைத்தியசாலையில் சிகிட்சை பெற்றுவரும் நிலையில், பாடசாலையிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய சீர்கேடுகளுக்கு பல்வேறுபட்ட காரணங்கள் கூறப்பட்டாலும் தெ.இலங்கை சுற்றுலாப்பயணிகளின் வருகையே முக்கிய காரணமாக சமூகத்தினர் குறிப்பிடுகின்றனர்.

எது எவ்வாறிருப்பினும் தமிழ்ப் பெண்களுக்கேயான தனித்தன்மை போற்றப்பட வேண்டிய ஒன்றாகும். எனவே, விழித்திடுங்கள்...உங்கள் உறவுகளை சரியான பாதையில் வழிநடாத்துவது உங்கள் கைகளிலேயே உள்ளது....!!!

                                        விழித்திடு......சமுதாயமே....                                                
                                                    விழித்திடு!
Continue reading →

Saturday, December 4, 2010

தமிழர்களே..... சிந்தியுங்கள்.....!!!

தமிழ்ப் பாரம்பரியமும், பழமையும் இன்று தறிகெட்டுத் தளம்புகின்றன. தமிழனென்று மார்தட்டி வாழ்ந்த காலம் மலையேறிவிட்டது. இன்று நவீனத்துவம் என்ற பெயரில் தமிழ் சிதைக்கப்படுகிறது.

எதையும் தன்னுள் உள்வாங்கி பழமையை போற்றியும், புதுமையைப் புகுத்தியும் ஓர் செம்மையடைந்த-கருவி மொழியாக திகழ்ந்திடும் தமிழ் மொழியை தற்காலத்தில் தமிழனே நலிவடையச்செய்கின்றான் என்பது மனவருத்தமடையச்செய்கின்றது.

தரணி போற்றும் தமிழணங்கை, தாய்த்தமிழை நவீன மொழி,நாகரிக மோகத்தின் காரணத்தால் கொச்சைத் தமிழாக்கி பேசுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதா?தமிழ் பாரம்பரியத்தை உதறித்தள்ளுவது சரியானதா?        
சிந்தியுங்கள்.... தமிழர்களே..... சிந்தியுங்கள்.....!!!

           ' 'தமிழனென்று சொல்லுவோம்....தமிழை தரணியில் உயர்த்திடுவோம்....!''
Continue reading →

Online Details

 

dishunters

Copyright 2010 யாழின் விடியல். All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog