
தென்மராட்சிப்
பகுதியில் கடந்த 19ம் திகதி நடைபெற இருந்த கல்யாண நிகழ்வு ஒன்று
பிற்போடப்பட்டுள்ளது. இதற்கான காரணம் மாப்பிளை மது மயக்கத்தில் இருந்ததே
ஆகும்.
கொழும்பில் தனியார் கம்பனி ஒன்றில் உதவி
முகாமையாளராக வேலை செய்யும் 29 வயதுடைய நபர்
ஒருவருக்கு தென்மராட்சிப் பகுதியில் உள்ள பெண் ஒருவரை பேசி
நிச்சயப்படுத்தி இருந்தார்கள். மாப்பிளையின் சொந்த இடமும்
தென்மராட்சி என தெரியவருகின்றது. பெண் மற்றும் மாப்பிளை
இருவரும் பட்டதாரிகள். இவர்களுக்கு 19ம் திகதி திருமணம் செய்வதாக
நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் கடந்த 17ம் திகதி பொன்னுருக்கும் 19ம்
திகதி கல்யாணமும் என தீர்மாணித்திருந்தார்கள். 17ம் திகதி பொன்னுருக்கு
செய்வதற்காக பொம்பிளை வீட்டில் இருந்து காலை8.30 மணிக்கு மாப்பிளை
வீட்டுக்கு உறவினர்கள் வந்திருந்தார்கள். அத்துடன் பொன்னை உருக்குவதற்கு
ஆசாரியும் வந்திருந்தார். அனால் முக்கியமான கதாநாயகன் அங்கு
பிரசன்னமாகவில்லை. அத்துடன் மாப்பிளை வீட்டாரும் பதற்றத்துடன்
காணப்பட்டுள்ளார்கள்.
அவர்களை பெண் வீட்டார் விசாரித்த போது மாப்பிளை
இன்னும் கொழுப்பால் வரவில்லை என கூறப்பட்டது. இதனால் பெண் வீட்டார்
அதிர்ச்சி அடைந்த நிலையில் பகல் 12 மணிவரை காத்திருந்து தமது வீட்டுக்கு
சென்று விட்டனர்.
அதே நேரம் மாப்பிளையை தந்தை மற்றும் சகோதரங்கள் கைத்
தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முற்பட்டும் தொலைபேசி ஒன் லைன் ஆக
இருந்தும் மாப்பிளை பதிலளிக்கவில்லை. உடனடியாக தந்தையும் மாப்பிளையின்
மாமனாரும் கொழும்பு விரைந்தார்கள்.
இதே நேரம் மாலை 1 மணியளவில் மாப்பிளை
தொலைபேசியில் வீட்டாருடன் கதைத்துள்ளார். நான் இப்போ
அனுராதபுரத்திற்கு கிட்ட வந்துகொண்டிருக்கின்றேன்.
அனைவரையும் நிற்கச் சொல்லுங்கள் 6 மணிக்குள் வந்துவிடுவேன். நடந்த
பிரச்சனையை நேரில் சொல்கின்றேன் என கூறியுள்ளார்.
இத் தகவல் தகப்பனிற்கு ம் கூறப்பட்டது. உடனடியாக
தகப்பனன் மற்றும் மாமன் வவுனியாவில் இறங்கி மாப்பிளைக்காக
காத்திருந்தார்கள்.
இதே நேரம் பெண்ணுடன் தொபேசி மூலம் மாப்பிளை பலதடைவைகள்
கதைத்திருந்தார். கதைக்கும் போது நான் எனது
நண்பர்களுக்கு பேர்ச்சுளர் (Bachelor) பார்ட்டி கொடுத்துவிட்டுதான்
பொன்னுருக்குக்கு வருவேன் என்ற தகவலும் கூறியுள்ளார்.
இதுவும் மாப்பிளையின் தகப்பன் காதுக்கு சென்றடைந்தது.
வவுனியாவில் தனி வாகனத்தில் வந்த மாப்பிளை தனது தகப்பன்
மற்றும் மாமன் ஆகியோரை வாகனத்தில் ஏறச் சொல்ல ஏன் வரவில்லை என்ற
காரணத்தைச் சொல்லு. இல்லாவிடில் யாழப்பாணத்துக்கு வர வேண்டாம் திரும்பி
கொழும்பு செல் என தகப்பனால் கூறப்பட்டுள்ளது.
தனது நண்பர்களுக்கு தான் பார்ட்டி வைத்ததாகவும் இரவு
யாழ் வருவதற்கு பஸ் புக் பண்ணி விட்டு மாலை 4 மணியளவில் தனது
நண்பர்களுக்கு பார்ட்டி வைத்த போது தனக்குக்கும் குளிர்பாணத்துடன்
தெரியாது மது கலந்து தந்துவிட்டார்கள். அதனால் என்னால் இரவு பஸ்சில்
வரமுடியாது தூங்கிவிட்டேன் என்று மாப்பிளை கூறியுள்ளார். உடனே அந்த
இடத்தில் வைத்து மகனை தந்தை அனைவரும் பார்க்க அடித்துள்ளார்.
உடனடியாக வாகனத்தில் ஏறி பெண் வீட்டாரிடம் சென்று
நிலமையை தகப்பன் மற்றும் மாப்பிளை ஆகியோர் கூறியுள்ளனர். அதை
ஒத்துக்கொள்ளாத பெண்ணின் தந்தை பின்னர் யோசித்து பதில் சொல்கின்றோம்
என கூறி இவர்களை வழி அனுப்பியுள்ளர்.
பெண்ணுடன் பின்னர் மாப்பிளை தொலைபேசியில்
உரையாடி நிலமையை தற்போது சுமூகமாக கொண்டுவந்துள்ளார். பல்கலைக்கழகத்தில்
படித்த பெண் என்றபடியால் புரிந்துணர்வு அடிப்படையில் பெண் தனது தந்தைக்கு
நிலமையைக் கூறி வரும் வைகாசி மாதத்திற்கு திருமணத்தை
நிச்சயப்படுத்தியுள்ளார்.
0 comments:
Post a Comment