
கொச்சி: அழிந்துவிட்டதாக கருதப்பட்ட கத்தி மீன், தவளை நண்டு ஆகியவை 116 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கேரளாவை ஒட்டி வங்கக்கடலில் இவை இருப்பது தெரியவந்துள்ளது. ஆழ்கடலில் இருக்கும் மீன், நண்டு உள்ளிட்ட உயிரினங்கள் பற்றி மத்திய கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி கழகம் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறது. ‘சாகர் சம்ப்டா’ என்ற ஆராய்ச்சிக் கப்பலின் உதவியுடன் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கேரள மாநிலம் கொச்சி அருகே வங்கக்கடலில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அழிந்து விட்டதாக கருதப்படும் ஒருவகை வவ்வால் மீன், கத்தி மீன், தவளை நண்டு ஆகியவை தற்போதும் இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உயிரினங்கள் ஆழ்கடலில் சுமார் 265 மீட்டர் முதல் 457 மீட்டர் ஆழத்தில் வாழக்கூடியவை. 116 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் மேலும் கூறியதாவது:....
மேலும் வாசிக்க இதனை Click

உங்கள் விருப்பத்தை தெரிவிக்க இதனை Click செய்க...

0 comments:
Post a Comment