Wednesday, July 13, 2011

கேள்விக்குள்ளாகும் யாழ்ப்பாணத்தின் இன்றைய கலாசாரம்

வணக்கம் நண்பர்களே இந்த முறை என் பதிவு சற்று சிறியதாகவும் ஒரு சமூக பிரச்சனை அலது சீரழிவு தொடர்பானதாக அமைகின்றது .காரணம் பரீட்சைகள் வருகின்றமையே நேரம் ஒதுக்குவதில் சிறிய சிக்கல் தான் என்றாலும் கிடைத்த நேரத்தில் இதை பதிகிறேன் சரி நாம் விடயத்துக்குள் வருவோம் . தமிழர் பாரம்பரியத்தின் தாயகமாக கூறப்பட்டவிடியலைநோக்கி சிறப்பினையுடையது எமது யாழ் நிலம்.அனால் அது தற்க்காலத்தில் சிதைந்து போவதனை கண்முன்னே காண முடிகின்றது எனலாம்.பாரம்பரியதினதும்,ஒழுக்கத்தினது இருப்பிடமாக இருந்த எமது யாழ் தாயானவள் இன்றைய காலகட்டத்திலே ஒழுக்க குறைவிற்க்கும்,கட்டுக்கோப்பற்ற தவறான வாழ்க்கை முறைக்கும் தள்ளப்பட்டுள்ளால் எனலாம்.மேலைத்தேய மோகத்தினாலும்,தொழில்நுட்ப வளர்ச்சினாலும் மனிதன் அடைந்துவிட்ட அதீத வளர்ச்சினாலேயே இன்று இந்தநிலை எம் மண்ணிற்க்கு.மேலைத்தேசத்தவரது கலாசாரப் பரவலானது இலங்கைத்தீவில் அதிகூடுதலாகப் பரவிவருகின்றது.இதனை இன்றைய என் நாடு சுற்றுலா பிரதேசங்களில் காணக்கூடியதாக உள்ளது. மதிய மலைநாட்டு பிரதேசங்களில்,ஹக்கல பூங்கா,பேராதனைப் பூங்கா,காலி கடற்க்கரை முதலியனவற்றில் அதிக சீர்கேடுகள் இடம்பெற்று வருகின்றன எனலாம்.தமிழ் பாரம்பரியம் மிகவும் கட்டுக்கோப்பினையுடையதொரு தனிச்சிறப்பான பாரமப்ரியமாகும்.இந்தநிலையில் ஒருவனுக்கு ஒருத்தி என்பது தான் தாரக மந்திரமாக கொள்ளப்படுகின்றது.மேலும் கணவன்-மனைவி இடையிலான தாம்பத்திய உறவானது மிகவும் புனிதமானதாக போற்றப்படுகின்ற பூமியாக உள்ளது.எனினும் மேலைத்தேய கலாசாரமானது மிகவும் நேர்மாறானதொரு போக்கினையே அன்றிலிருந்து இன்று இன்றுவரை கைக்கொண்டுள்ளது.அந்தவகையில் அந்நாட்டவர் தாம்பத்திய உறவின் தனித்துவத்தினையும்,மகிமையையும் அறியாதவர்கள் பொது இடங்களில் எவ்வாறான நடத்தை கோலத்தை கைக்கொள்வதென்ற பாகுபாடு இல்லாதவர்கள் இதன் காரணமாக இன்று எம் நாட்டு சுற்றுலா மையங்களிலில் இவ்வாறான கோலத்தினைக்காணக்கூடியதாக உள்ளது.இந்த நிலைமையானது எம் யாழ் மண்ணிற்க்கும் இன்று ஏற்ப்பட்டுள்ளமையே மிகவும் மனவருத்தமடையச் செய்வதாகவே விடியலைநோக்கி அமைந்துள்ளது.யாழின் சுப்பிரமணியம் பூங்காவானது இத்தகைய இழிநிலைக்கு ஆளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.மேலைத்தேய கலாசாரம் காரணமாக எம் மண்ணின் இளம் சமுதாயமும்:தமிழர் பாரம்பரியமும் தறிகெட்டுத் தளம்பும் நிலை உருவாகியுள்ளது.எனவே நண்பர்களே(யாழ் வாசிகளே)தாய் மண்ணின் கலாசாரத்தையும்,பாரம்பரியத்தையும் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரது கடமையும் சேவையும் ஆக்கும் என்பதை மனத்திற் செயற்படுவோமாக.

0 comments:

Post a Comment


Online Details

 

dishunters

Copyright 2010 யாழின் விடியல். All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog