Wednesday, January 5, 2011

::.யாழ்ப்பாணத்தில் பேஸ்புக் ஏற்படுத்திய இளவயதுக் கர்ப்பம்‏.::



இணையத்தின் சமூகவலைத் தளமான முகப் புத்தகம் ( பேஸ்புக்) யாழ்ப்பாணத்தில் ஏற்படுத்திய முதற் பாதிப்பால் இளம் பாடசாலை மாணவி ஒருவர் கர்பமுற்றுள்ளார்.



தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்த பாடசாலையில் உயர்தரம் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவி தனது மேலதிக கற்றல் நடவடிக்கைக்காக சனி, ஞாயிறு மற்றும் பாடசாலை விடுமுறை நாட்களில் யாழ்ப்பாண நகரத்தில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் மேலதிக கல்வி கற்று வந்துள்ளார். போக்குவரத்து பிரச்சனை காரணமாக குறிப்பிட்ட மாணவியின் தந்தை ( கொடிகாமம் வர்த்தகர்) தனது நண்பனான நகரப்பகுதியில் உள்ளவரது வீட்டில் அதே ஆண்டில் நகர்புற கல்லூரியில் கல்வி கற்றும் ஒரு மாணவியுடன் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இருவரும் சேர்ந்து அந்த வீட்டில் உள்ள இணைய வசதி உள்ள கணனியில் தமக்கு முகப் புத்தகக் கணக்குகளை (பேஸ்புக்) ஆரம்பித்து நண்பர்களுடன் அரட்டை அடித்துள்ளனர். குறிப்பிட்ட மாணவியின் 'பேஸ்புக்' ல் தொடர்பை ஏற்படுத்திய இளைஞன் ஒருவர் தான் தற்போது மொறட்டுவை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளதாக தெரிவித்து நெருங்கிய நட்பினை பேஸ் புக் ஊடாக பெற்றுள்ளார்.

இந்த இளைஞனது தொடர்பை அடுத்து வீட்டு கணனியில் அரட்டை அடிப்பதை நிறுத்தி விட்டு இணைய சேவை வழங்கும் நிலையங்களில் சென்று குறிப்பிட்ட மாணவி அந்த இளைஞனுடன் அரட்டை அடித்துள்ளார். பின்னர் தனது தொலைபேசி இலக்கத்தினை வழங்கி இளைஞனுடன் தொடர்புகள் பேணி இருந்துள்ளார். அதன் பின்னர் இருவரும் சந்தித்து பல்வேறு இடங்களுக்கும் சென்றுள்ளனர். மாணவி கல்வி பயிலும் பாடசாலையில் குறிப்பிட்ட மாணவி அடிக்கடி வாந்தி எடுத்ததால் சந்தேகமடைந்த அதிபர் மற்றும் பாட ஆசிரியை மாணவியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு இட்ட போது மாணவி மறுக்கவே பெற்ரோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பெற்றோர் வீட்டில் மாணவியை கூட்டிச் சென்று விசாரிக்கும் போது உண்மை வெளியே வந்தது. உடனடியாக குறிப்பிட்ட இளைஞனைப் பற்றி விசாரனைகளை தந்தை ஆரம்பித்தபோது இளைஞனின் பேஸ்புக் மாற்றப்பட்டும் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் செயலிழந்தும் காணப்பட்டது. இரகசியமாக பேணப்பட்டு வந்த இந்தச் சம்பவம் அந்தத் தந்தையின் அடாவடித் தனத்தால் பலருக்கும் தெரியவந்தது.

குறிப்பிட்ட மாணவி தங்குவதற்கு இடம் கொடுத்த தனது நண்பனை அவரது வீட்டில் சென்று தரக்குறைவாக பேசி கைகலப்பாக மாற்றி சகலருக்கும் தெரியப்படுத்தி உள்ளார் தந்தை. பொலிசாரிடம் விசாரனைக்கு சென்ற போது மாணவியின் கர்ப்பம் பற்றிய தகவல்கள் மறைக்கப்பட்டு முறைப்பாடு செய்யப்பட்டது. பின்னர் நகர்ப்பகுதி நண்பன் கர்ப்பம் பற்றி முறைப்பாடு செய்ய முயல்கையில் தந்தையால் சமாதானம் ஆக்கப்பட்டு முறைப்பாடு ரத்தாகியது. இந் நிலையில் குறிப்பிட்ட மாணவி பற்றி பாடசாலை அதிபர் தகப்பனிடம் வினாவிய போது சம்பவம் பற்றி தெரியப்படுத்திய தந்தை பாடசாலை அதிபரிடம் கெஞ்சி மன்றாடி தகவல்கள் வெளியே தெரியாதவாறு மறைத்துள்ளார்.


பேஸ்புக்கில் தொடர்பு கொண்ட இளைஞன் 1989ம் ஆண்டு 13ம் திகதி பிறந்தவர் என்றும் மொறட்டுவ பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி உள்ளதாகவும் அவரது பேஸ்புக் தரவுப்படி அவர் மானிப்பாயை சேர்ந்தவர் எனவும் யாழ்ப்பாணத்தில் பிரபல தனியார் கல்லூரியில் கல்வி பயின்றதாகவும் யாழ் மேனகன் என்னும் புனைப் பெயரில் மாணவியுடன் தொடர்பாகிய இவ் இளைஞன் பற்றிய மேலதிக தகவல்கள் எதுவும் தமக்கு தெரியாது என குறி்ப்பிட்ட மாணவியின் நண்பி தெரிவித்துள்ளார். அம்மாணவியின் பேஸ்புக் நட்பு வட்டாரத்திலிருந்தும் அவ் இளைஞர் விலகி உள்ளார் என தெரியவருகின்றது.

இவ்வாறான சம்பவங்கள் இன்னும் வளரவிடாது தடுப்பதற்கு அனைவரும் நடவடிக்கை எடுப்பது அவசியம்.


ஏனெனில் இன்னும் சில மாதத்தில் இன்னொரு குழந்தை அநாதரவான நிலையில் வீதியில் வீசப்படலாம்.


நன்றி உங்கள் வரவிற்கு மீண்டும் வருக

Home

0 comments:

Post a Comment


Online Details

 

dishunters

Copyright 2010 யாழின் விடியல். All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog